சம்ரான்-01 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
சம்ரான்-01 செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.இதனை ஈரானின் துணை இராணுவ புரட்சி காவல் படையால் உருவாக்கப்பட்டுள்ளது.
இது புவியிலிருந்து 550 கி.மீ உயர சுற்று வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது கயீம்-100 என்ற ரொக்கட் மூலம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
விண்வெளி வன்பொருள் மற்றும் மென்பொருளை சோதிப்பதாக இருக்கும்.இதே வேளை குறிப்பிட்ட செயற்கை கோளிலிருந்து கட்டுப்பாட்டு நிலையத்திற்கு சிக்னல் பெற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹெலிகொப்படர் விபத்தில் ஜனாதிபதி இப்ராயிம் ரெய்சி உயிரிழந்த பின்னர்,புதிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் பதவியேற்றார்.இவர் பதவி ஏற்ற பின்னர் விண்ணில் செலுத்தப்படும் முதலாவது செயற்கை கோளாகும்.