இஸ்ரேல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்..!
இஸ்ரேல் மீது அவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர் .
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை 11 நிமிடத்தில் இஸ்ரேலை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் போது இஸ்ரேலின் வான்பரப்பிற்குள் வந்த ஏவுகணையை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு தடுத்துள்ளது.இதன் போது ஏவுகணை வெடித்து சிதறின. மேலும் ரொக்கெட்டுகள் இஸ்ரேலிற்குள் விழுந்தன.இந்த தாக்குதல் காரணமாக மோடியில் புகையிரத நிலையத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.எனினும் இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி நிச்சியம் வழங்கப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாலஸ்தீன போர் நடைப்பெற்று வருகிறது.இதில் மேற்குலக நாடுகள் இஸ்ரேலிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.பாலஸ்தீனம் சார்பாக போர் புரியும் ஹமாஸ் போராகளுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.