சமூக ஊடகங்கள் முடக்கப்படுமா?
தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் இருப்பர்.தேர்தல் தினத்தன்று ஊடரங்கு சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்த பின்னர் 48 மணித்தியாலங்கள் சமூக ஊடகங்களை முடக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் நள்ளிரவு 18ம் திகதி நள்ளிரவுடன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.