‘பெயின்கா’சூறாவளியால் கடும் பாதிப்புக்குள்ளான ஷாங்காய் நகரம்..!
75 ஆண்டுகளுக்கு பிறகு சீனாவின் ஷாங்காய் நகரை ‘பெயின்கா’ சூறாவளியானது தாக்கியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்த்தப்பட்டிருந்தனர்.அதன் காரணமாக பாதிப்பு ஓரளவு குறைக்கப்பட்டிருந்தது.சூறாவளியின் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தனர்.புகையிரத சேவையும் இரத்து செய்யப்பட்டிருநதது.நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.நகரின் உட்பகுதிக்குள் 40கி.மீ வேகத்தில் பயணிக்க வேகவரம்பு நிர்ணயக்கப்பட்டது.
151 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் மரங்கள் விழுந்தன.இதன் காரணமாக ஷாங்காய் நகரம் பல இடர்களை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.