உதவி செய்ய உதவிடும் கைகள்..!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கை ஒரு தும்பிக்கை படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கை பேசுகிறேன்
கவனமாக கேளுங்கள்…..
நான்
உதவிகள் செய்யவும்
பயன்படுவேன்
நீங்கள்
ஒவுத்தீீனியம் செய்ய மட்டுமே
பயன்படுத்துகின்றீர்…… !
நான் அணைக்கவும்
பயன்படுவேன்.
நீங்கள்
அடிக்க மட்டுமே
பயன்படுத்துகின்றீர்…!
நான் கொடுக்கவும்
பயன்படுவேன்
நீங்கள்
எடுக்க மட்டுமே
பயன்படுத்துகின்றீர்….!
நான்
ஊட்டி விடவும் பயன்படுவேன்
நீங்கள்
உண்பதற்கு மட்டுமே
பயன்படுத்துகின்றீர்….!
நான்
புண்ணியத்தை பெறவும்
பயன்படுவேன்
நீங்கள்
பாவத்தைப் பெறவே
பயன்படுத்துகின்றீர்….!
நான்
கட்டளைகளை நிறைவேற்றவும்
பயன்படுவேன்….
நீங்கள்
கட்டளையிடுவதற்கே
பயன்படுத்துகின்றீர்….!
உழைப்பிற்காகவே
பிறப்பெடுத்து வந்த என்னில்
மந்திரக் கயிறு
அழகுக் கயிறு
எந்திரக் கயிறு
அந்தக் கயிறு
இந்தக் கயிறு என்று
கட்டுவதைக் கண்டு தான்
திட்டுவதற்கு
வாய்யில்லையே என்று
வருத்தப்படுகிறேன்…..
கையில் இருக்கும்
உழைப்பைப் பார்க்காமல்
ரேகையைப் பார்க்கும்
உங்களை நினைத்து
அழுவுவதா ?
சிரிப்பதா ? என்றே !
தெரியவில்லை…..
யானையின் தும்பிக்கைக்கும்
உங்களிடமிருக்கும்
கையிக்கும்
பெரிய வித்தியாசம் இல்லை
நீளத்தை தவிர…..
வெறுங்கை
வெறுங்கை என்று சொல்லி
என்னை கேவலப்படுத்தாதீர்கள் !
என்னில்
பத்து விரல்கள் இருக்கிறது…..!!! *கவிதை ரசிகன்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏