வீழ்வது தோல்வி அல்ல..!

வீழ்வது தோல்வி அல்ல

வீழ்வது தோல்வி அல்ல!
வாழ்ந்திடு வையம் வெல்ல!
நாள்வரும் தீர்ப்பு சொல்ல!
நல்லது நடக்கும்
மெல்ல!

நேர்பட பேசி பழகு!
நோய்நொடி விட்டு விலகு!
சீர்படும் மாற்றம் அழகு!
சோர்ந்தவர்க் கில்லை உலகு!

வேள்விகள் காண்பாய் நீயும்!
வெற்றியுன் பக்கம் சாயும்!
கேள்விகள் கூட ஓயும்!
கூட்டமும் தேடிப் பாயும்!

தோள்களில் வலிமை புகுந்து!
தீவினை கொண்டோர் துரத்து!
மேல்நிலை நெஞ்சில் நிறுத்து!
மீள்வதன் பாதை வகுத்து!

தாழ்ந்திடும் செயல்கள் ஒழிப்போம்!
தேர்ந்தநல் கர்மம் களிப்போம்!
பாழ்படும் தீமை அழிப்போம்!
பார்புகழ் வகையில் செழிப்போம்!
~” கவிவேந்தர்”டாக்டர் சோமதேவன் சோமசன்மா, ஜொகூர், மலேசியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *