கொலம்பியாவில் நிலநடுக்கம் பதிவு..!
கொலம்பியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.கொலம்பியாவின் மேற்கு கடற்கரைக்கு அருகே இன்றைய தினம் காலை இந்த திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 8.44 மணியளவில் குறித்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இது ரிச்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக ஜெர்மன் புவியியல் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.இதனையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதைகளில் குழுமி இருந்தனர்.