34வருடங்களின் பின்னர்” ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம்” மக்களின் வழிப்பாட்டிற்கு அனுமதி..!
உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி வடக்கு ஶ்ரீ இராஜராஜேஸ்வரி அமமன் ஆலயத்திற்கு இன்று முதல் தினந்தோறும் மக்கள் வழிப்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.ஏற்கனவே மக்கள் சென்ற பாதையூடாக இந்த ஆலயத்திற்கு பயணிக்கலாம் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னால் ஜனாதிபதி ரணில் விகரமசிங்ஹ ஆட்சியின் போது இந்த ஆலயத்திற்கு செல்ல வெள்ளிக்கிழமை மாத்திரம் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
34 வருடங்களின் பின்னர் தினந்தோறும் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.