அரசியல்இலங்கைசெய்திகள்

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இராமநாதன்
அர்ச்சுனாவுக்குப்   கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுளா ரத்நாயக்கவினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் ஊடாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பேஸ்லைன் வீதியில்
கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம்
திகதி ஏற்பட்ட விபத்து வழக்கின் தொடர்ச்சியாக நீதவானால் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் புதிதாக நாடாளுமன்றம் சென்றிருப்போருக்கான செயலமர்வுகளில் , தான்  பங்குபற்றவேண்டியதன் கட்டாயநிலைபற்றி அர்ச்சுனா தனது பேஸ்புக் தளத்தில் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வழக்கு விசாரணைகளில் முன்னிலையாவதை தவிர்த்து வந்த நிலையில் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *