இந்தவார உயர்தரப்பரீட்சைகள் தற்காலிக நிறுத்தம் – காரணம் சீரற்ற காலநிலை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக , பல்வேறு பகுதிகளிலும் அனர்த்தங்கள் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் ,  இந்த வார உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
குறித்த தினங்களில் நடைபெறவிருந்த பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 , 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெறும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *