மின்சாரக் கட்டணத்தை குறைக்க யோசனை..!
40% வரை மின்சாரக்கட்டணத்தை குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அதிகப்படியான மழை வீழ்ச்சி பதிவான நிலையில் ,நீர் தேக்கங்களில் நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.இதன் காரணமாக அதிக கொள்ளளவில் மின்உற்பத்தி நிலையங்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து 35% முதல் 40% வரையிலான மின்சாரக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர் சங்கத்தின் செலாளர் சஞ்சீவ தம்மிக தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் இந்த செய்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.