மக்கள் சிரியாவை கட்டி எழுப்புவதற்கான தருணம் இது-ஜோ பைடன்..!
அசாத் ஆட்சியின் நிறைவானது நீதிக்கான வரலாற்று செயல் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
சிரியாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையிலேயே ஜோ பைடன் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது “இது நீதிக்கான வரலாற்று செயல்.அந்நாட்டு மக்கள் சிரியாவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு கிடைத்த வரலாற்று சந்தர்ப்பத்திற்கான தருணம் ஆகும்.50 ஆண்டுகால ஆட்சி முறை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.கொடூர ஆட்சி முறை ஒழிக்கப்பட்டுள்ளது.கிளர்ச்சி படையினர் வலுக்கட்டாயப்படுத்தி,பதவியிலிருந்து அசாத் வெளியேறும்படி செய்ததுடன் அவரை நாட்டிலிருந்தே தப்பியோடும்படி செய்து விட்டனர்.நீண்ட காலத்திற்கு பிறகு அசாத் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளது.இலட்சக்கணக்கான அப்பாவி சிரிய மக்களை சித்ரவதை செய்து ,கொடூர முறையில் கொலை செய்தது இந்த ஆட்சி” என்று தெரிவித்துள்ளார்.
இதே வேளை நிச்சியமற்ற தன்மை,ஆபத்து என்பனவும் ஏற்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.இதே வேளை சிரியாவில் ஸ்திர தன்மை ஏற்படுவதற்கு அமெரிககா,அதன் நட்பு நாடுகளும் சிரியாவின் நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படும் என்று தெரிவித்துள்ளார்.