முட்டைகளின் விலையில் மாற்றம்..!
முட்டைகளின் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கமைய 30 ரூபா முதல் 35 ரூபாவிற்கு முட்டைகளை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளமையாலும் பண்டிகைகாலம் நெருங்கியுள்ளமையாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.