இருள்..!

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤 *இருள்* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

வெளிச்சத்தை அல்ல
இருளையும் நேசி
வெளிச்சத்தின் விலையை
இருள்தான் தீர்மானிக்கிறது….

இருள்
இல்லாமல் போயிருந்தால்
நிலவை ரசித்திருக்க முடியுமா?

கவிதைக்கு
ஒரு மின்மினிபூச்சி தான்
கிடைத்திருக்குமா…..?

விண்மீன்கள்
உவாமையாக
உருவகமாக
படிமமாக
குறியீடாக அமைந்திருக்குமா?

இருளிலிருந்து தானே !
விடியல் என்ற வார்த்தையே !
பிறக்கின்றது…

ஆதி மட்டுமல்ல
அந்தமும் இருள்தான்….

இந்த பூமி பிண்டத்தில்
தோன்றிய கருவறையும்
இருல்தான்
மறைகின்ற கல்லறையும்
இருள்தான்…..

இருளே நித்தியமானது
இருளில்
எந்த கலப்படமும் இருக்காது…

இருளே !
வெண்மையானது
இருளில்
எந்த வேறுபாடும் இருக்காது…

இருளே தெய்வீகமானது….

இமைகளின் இருளில் தான்
மனம் துயில் கொள்கிறது….

அறையின் இருளில்தான்
தாம்பத்தியம்
நிறைவேற்றப்படுகிறது….

தியான
இமை மூடலில் வரும்
இருளில் தானே
இறைவனே அடைவதற்கு
வழி தெரிகிறது….

பார்வை அற்றவர்களுக்கு
இவ்வுலகில்
இருள் ஏதுமில்லை….
அவர்களே !
ஒரு இருள் தான்
அதனால் தான்
மற்றவர்களை விட
வெளிச்சமாக இருக்கின்றனர்…

வெளிச்சத்திலும்
இருள் இருக்கத்தான் செய்கிறது
நிழலாக…..

நிலவு மட்டுமல்ல
இந்த பூமியே
இருள் வெளிச்சத்தின்
சங்கமம் தான்…..

வெளிச்சத்தை மட்டுமல்ல
இருளையும் நேசி
நீ வெளிச்சமாவாய்…… *கவிதை ரசிகன்*

🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *