அமைதியாக கடந்து செல்- எழுதுவது கவிஞர் கேலோமி..!

உள்
கட.
உள்
கட.
கடந்து
போகும்
போது
கடவுள்
புலப்படுகின்றான்.
உருவம்
அருவம்
அருவுருவம்
பரிணாமம்
பரிமாணம்
சூழலியலில்
சிக்காத
ஒன்றை
முப்பாலிலும்
அடங்காத
இது
தான்
என்று
தீர்மானிக்க
இயலாத
அந்தர்யாமி
வஸ்துவை
சாதி
இனம்
மொழி
மதம்
என்ற
பிரிவினைவாத
பட்டியலில்
இனமயமாக்கல்
கொள்கையில்
கூவி
விற்று
நாடு
விட்டு
நாடு
போய்
பல
பில்லியன்
டாலர்
செலவழித்து
மதமாற்றம்
செய்வது
வீணே!
அது
ஓர்
வஸ்து.
அது
எதுவாக
உணர்த்துகிறதோ!
அதை
மட்டுமே!
அறிவர்.
புத்தர்
இயேசு
கிருஷ்ணர்
நபி
நானக்
சூபி
இருப்பு
இல்லாமை
வெற்றிடம்
அனைத்தும்
உணருகின்றவனின்
எதார்த்தம்
மட்டுமே!
பத்து
திசைகளில்
எங்கு
வேண்டுமானாலும்
பயணி.
உன்னை
போல்
பிற
திசைகளில்
பயணித்து
கொண்டு
இருப்பவர்களும்
சுதந்திரமாக
பயணிக்கட்டும்.
முடிந்தால்
வாழ்த்து
சொல்.
இல்லை
மௌனமாக
பயணி.
உன்
மத
மொழி
சாதி
இன
பெருமை
கூறாதே!
கேட்பவருக்கு
அது
நாரசமாக
இருக்கலாம்.
உணர்வை
உணர்ந்ததை
பங்கு
போடாதே!
அது
இங்கு
ஒற்றுமையை
அழித்துவிடும்.
அமைதியாக
கட.
கடைசியில்
அமைதியாக
கடந்திருப்பர்.
கேலோமி🌹🌹🌹🌹🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *