இஸ்ரேல் மீது, ஏமனில் இருந்து தாக்குதல்..!
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது நேற்றிரவு ஏமனில் இருந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது எச்சரிக்கைக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது.இதனையடுத்து பாதுகாப்பு கருதி மக்கள் பல இடங்களில் தஞ்சமடைந்தனர்.எனினும் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டிற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவருகிறது.
இந்நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர்,மேலும் பலர் நிர்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இந்த நிலையிலேயே ஏமனில் இருந்து அவுத்தி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.