போர்க்களம்..!
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
எழுந்து வா
இளைஞனே! படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வெற்றி மாலையை
விரும்பும் நீ !
போர்க்களத்தை
வெறுக்கலாமா…?
பதக்கங்களுக்கு
ஆசைப்படும் நீ !
போட்டியை
அலட்சியப்படுத்தலாமா…?
எழுவதற்கு
பெருமைப்படும் நீ
விழுவதற்கு
வெட்கப்படலாமா…..?
சாதனைப் பட்டத்திற்குத்
துடிக்கும் நீ !
வேதனை
வட்டத்திற்குள் அடங்கலாமா?
உயர்வதற்கு
நினைக்கும் நீ !
உழைப்பதற்குத் தயங்கலாமா…?
கைதட்டலுக்கு
ஏங்கும் நீ
கைகட்டி நிற்கலாமா ….?
காலத்தையே
வெல்ல நினைக்கும் நீ!
சோம்பேறித்தனத்திடம்
தோற்கலாமா….?
எழுந்து வா இளைஞனே!
வரலாறு
காத்திருக்கிறது
உன் வருகைக்காக…..!!*கவிதை ரசிகன்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥