சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம்..!
சூரியனுக்கு மிக அருகில் சென்ற விண்கலம் என்ற பெருமையை பார்க்கர் விண்கலம் தனதாக்கியுள்ளது. இந்த விண்கலம் ஆனது 2018 ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பியிருந்தது.
சூரியனின் புயல்,மேற்பரப்பு வெப்பம்,சூரிய துகள்கள் போன்றவற்றை ஆய்வு செய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பபட்டது.
இது மணிக்கு 6 லட்சத்து 92 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது.இதன் மனிதர்களால் விண்வெளிக்கு அனுப்பபட்ட மிக வேகமான பொருள் என்ற சாதனையையும் இது தன் வசப்படுத்தியது.
இந்த விண்கலத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆராய்ந்துவருவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.