டைமர்போஸைக் குறிவைத்துத் தாக்கி அதன் பாதையை மாற்றியது டார்ட்.

2021 இல் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தால் செலுத்தப்பட்ட விண்கலமான டார்ட் [ Double Asteroid Redirection Test] 26 ம் திகதி இரவு தனது குறியைத் தாக்குவதில் வெற்றிகொண்டது. நாஸாவின் நோக்கம் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் சிறுகோள்களைத் திட்டமிட்டு இடித்து அது சுற்றிவரும் பாதையிலிருந்து விலக்கிவிட முடியுமா என்பதாகும். எதிர்பார்த்தது போலவே டைமர்போஸ் என்ற சிறுகோளை முட்டிய டார்ட் அச்சிறுகோள் செல்லும் பாதையை மாற்றியது.

பூமிக்கு சுமார் 11 மில்லியன் கி.மீற்றர் தூரத்திலிருந்து டிமர்போஸ் – டார்ட் மோதல் படங்கள் பூமிக்கு அனுப்பப்பட்டன. டைமர்போஸ் சுற்றிவரும் வழியை சில நிமிடங்கள் மாறக்கூடியதாக மாற்றுவதே நாஸாவின் திட்டம். அது நிறைவேறியதா என்பதை அறிய ஓரிரு வாரங்களாகும். டைமர்போஸின் இரட்டையான டிடிமோஸ் புவியைச் சுற்றிவர எடுக்கும் நேரத்துடன் ஒப்பிடுவதன் மூலமே அது தெரியவரும். டார்ட் மோதலைச் சந்திக்க முன்னர் டைமர்போஸ், டிடிமோஸ் ஆகிய இரண்டும் புவியைச் சுற்றிவர 11 மணி 55 நிமிடங்கள் எடுத்தது. மோதலில் நோக்கம் வெற்றியடைந்திருப்பின் டைமர்போஸ் புவியைச் சுற்றிவர எடுக்கும் நேரம் இனிமேல் சில நிமிடங்களால் குறைந்திருக்கவேண்டும்.

“அறிவு வளர்ச்சியில் நாம் இன்னொரு கட்டத்துக்கு மாறியிருக்கிறோம். எங்களது புவியைத் தாக்கி அழிக்கக்கூடிய விண்கற்களிலிருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய தொழில் நுட்பபலம் எங்களிடம் இருக்கிறது. இதுபோன்ற தொழில்நுட்ப அறிவு இதற்கு முதல் எங்களிடம் இருந்ததில்லை,” என்கிறார் லொரி கிளேஸ். அவர்தான் நாஸாவின் குறிப்பிட்ட திட்டத்தின் நிர்வாகியாகும்.

டைமர்போஸ், டிடிமோஸ் ஆகிய இரண்டு விண்கற்களும் கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட்டன. அவையிரண்டும் எதிர்காலத்தில் புவியில் மோதக்கூடிய ஆபத்து இருக்கவில்லை. ஆனால், விண்வெளியில் புவியில் மோதிப் பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடும். திங்களன்று இரவு நடத்தப்பட்ட பரீட்சை வெற்றிபெற்றது தெரிந்தால் அப்படியான மனிதனால் எதிர்காலத்தில் அப்படியான ஒரு விண்கல்லிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *