ஸ்வஸ்திகா சின்னத்துடனான டி ஷேர்ட், முகமூடியணிந்து ரஷ்ய பாடசாலையில் 17 பேரைக் கொன்றவன் தற்கொலை செய்துகொண்டான்.

ரஷ்யாவின் இஷேவ்ஸ்க் நகரப் பாடசாலைக்குள் திங்களன்று நுழைந்த ஒருவன் அங்கே 13 பேரைச் சுட்டுக் கொன்று, 20 பேரைக் காயப்படுத்திய பின்னர் தன்னை மாய்த்துக் கொண்டதாக ரஷ்யப் பொலீசார் தெரிவிகின்றனர். சுமார் 30 வயதான அக்கொலைகாரன் கறுப்பு உடைகளை அணிந்து கண்களை மட்டும் காட்டும் முகமூடியும் அணிந்திருந்தான். அவனது டி ஷேர்ட்டில் இருந்த ஸ்வஸ்திகா சின்னத்தைக் கண்டு அவன் ஒரு நாஸி- ஆதரவாளனாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

அர்த்தெம் கசன்ஸ்தேவ் என்று கொலைகாரனின் பெயரை வெளியிட்டிருக்கின்றனர். அவனால் கொல்லப்பட்டவர்களில் ஆறு பேர் வயதுக்கு வந்தவர்கள், மற்றையோர் பாடசாலை மாணவர்களாகும். அப்பாடசாலையின் மாணவனான அவன் எதற்காக அவர்களைக் கொன்றான் என்பது தெரியவில்லை. அவனது பின்னணி, நாஸி – தொடர்புகள் பற்றி ஆய்வதற்காக அவனது வீட்டில் சோதனைகள் நடத்தி அவனுக்கு நெருக்கமானவர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

இறந்தவர்களுக்காக அனுதாபம் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புத்தின் இஷேவ்ஸ்க் நகருக்கு மருத்துவ, மனோதத்துவ நிபுணர்கள் ஆகியோரை அனுப்பிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டிருப்பதாக அரச பேச்சாளர் தெரிவித்தார். இஷேவ்ஸ்க் நகர் மொஸ்கோவிலிருந்து சுமார் 900 கி.மீ தூரத்தில் இருக்கும் உர்முர்ட் குடியரசின் தலைநகராகும். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *