முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு ஈழவேந்தன் இவ்வுலகை விட்டுப்பிரிந்தார்.


யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்த ஈழவேந்தன் அவர்கள்  கனடா ரொரேண்டோவில் காலமானார் என்ற செய்தியை அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

மும்மொழிப் புலமையோடு கொழும்பில் இருந்து தனது குரலை தமிழர்களின் பக்கமாக , ஓங்கி ஒலித்த நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கியவராவார்.
யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான அமரர் ஈழவேந்தன் அவர்களின் இயற்பெயர் கனகேந்திரன் ஆகும்.

2004 ம் ஆண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாரிய வெற்றிக்குப் பின்னர் , தேசியப் பட்டியலில் நாடாளுமன்றத்திற்காக தெரிவுசெய்யப்பட்டவர் அமரர் ஈழவேந்தன் அவர்கள் ஆவார்.


இந்தியாவின் தமிழகத்திலும் வாழ்ந்த இவர், அங்கிருந்தும்  ஈழம் நோக்கிய பணிகளை முன்னெடுத்தவர். 2001 ம் ஆண்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு கொழும்பில் வாழ்ந்த வேளை    அவரின்  72 வயதில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும்படி வந்த அழைப்பை ஏற்று தொடர்ந்து தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்.

தனது நிறைவுக்காலத்தில் கனடாவில் வாழ்ந்து வந்த வேளை இவ்வுலகை நீத்திருக்கிறார்.

எந்த சந்தர்ப்பத்திலும் தமிழர்களின் உரிமைக்குரலாக ஆணித்தரமாக கருத்துகளை முன்வைத்து பேசும் குரலாய் வாழ்ந்த ஈழவேந்தன் அவர்களுக்கு உலகெங்கும் வாழும் பலரும் தங்கள் அஞ்சலிகளைப் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *