குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை..!
இவ்வருட இறுதிக்குள் 6000 ரூபா கொடுப்பனவினை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடுப்பனவு புத்தகங்கள்,உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படவுள்ளது.
இதனை கல்வி அமைச்சூடாக செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதி வாய்ந்த பிள்ளைகளை தெரிவு செய்து அதனை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு கல்வி அமைச்சு முன்னினறு செயற்படவுள்ளது.