புத்தாண்டின் துவக்கம்..!
புத்தாண்டின் துவக்கம்
எல்லோருக்கும் புது வாழ்வைக்
கொடுக்கட்டும் …
வருடா வருடம் …அது தமிழ்
ஆண்டின் துவக்கமோ ?
அது ஆங்கில ஆண்டின்
துவக்கமோ ?
நம் மனதிலொரு புத்துணர்வு …
இந்த வருடமேனும் …
நம் வாழ்வின்
ஏக்கங்கள் தீர …எடுத்த நல்
நோக்கங்கள் நிறைவேற …
எண்ணாத உள்ளங்கள் இல்லை …
ஆக எல்லாம் வல்ல
இயற்கைப் பேராற்றல் …
நம் அனைவருக்கும்
புதுப் பாதை காட்டி …
மகிழ்ச்சியைக் கூட்டும் …
வருடமாக இந்த 2025 ஆண்டு
பிறக்கட்டுமாக …
வளர்க
இயற்கையின் வளம் …
வாழ்க … பல்லுயிர்களின் நலம் …
அதன் வழியில் மனிதமும்
உயர்க உயர்கவே …
கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052