நிலநடுக்கத்தினால் பலர் உயிரிழப்பு..!
நேற்று திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்தும் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.இதன் காரணமாக கட்டிடங்கள் குழுங்கியுள்ளன.இதனை தொடரந்து மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.இந்த நிலநடுக்கத்தின் காரணமாக 126 பேர் உயிரிழந்துள்ளனர் .188 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று காலை 8.00 மணிவரை 515 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளது.