ஏமனில் வான்வழி தாக்குதல்
அமெரிக்காவானது நேற்றைய தினம் ஏமனில் வான் வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.ஏமனின் தலைநகர் சனா,அம்ரன் மாகாணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஓராண்டிற்கு மேலாக இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா செயற்பட்டுவருகிறது.இந்த நிலையிலேயே பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துவரும் ஏமனின் அவுத்திகிளர்ச்சியாளர்களின் மீது இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.