கிராமத்து வாசம் தந்திடும் ஜீவன்கள்..!
வண்ணக் கோலமும் சிறுகவியும்:எண்::31
🐂🐄🍀🍃🐂🐄🍃🐄🐂
கோமாதா நமது குலமாதா அறிவீரே!
மாந்தருக்கு பால் கொடுக்கும் பசுவும்!
உழவுக்கு தலை நீட்டி
வயல்வரப்பு உழுத எருதும்
வண்டி பூட்டி சலங்கை
கட்டி ஓடும் காளையும்
நம் கிராமத்து வாசம் தந்திடும் ஜீவன்களை
இன்று கொண்டாடி நன்றி நவில்வோம்…!
மனிதனுக்காய் தோள்(ல்) கொடுத்து
மாந்தருக்கே தனைக் கொடுத்து வாழ வைக்கும் வம்பில்லா ஜீவன்களை போற்றி
மகிழ்ந்திடுவோம்!
இதனருமை
தெரிந்த நாமும் மறந்திட்டால்
அறிவைப் பெருக்கி ஆவதென்ன?
பா ஆக்கம்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை