போர் நிறுத்தத்திலும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்..!
இஸ்ரேல் பாலஸ்தீனததிற்கு இடையில் போர் திறுத்தம் எட்டப்பட்ட போதிலும் ,பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் போது 28 குழந்தைகள் ,31 பெண்கள் உட்பட 115 பேர் உயிரிழந்துள்ளனர்.265 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக காஸாவின் சிவில் பாதுகாப்புத் பிரிவின் செய்து தொடர்பாளர் மஹ்முத் பாசல் கருத்து வெளியிட்டுள்ளார்.” போர் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பு இருந்த போதிலும் ,காஸா மீது தொடர் குண்டு தாக்குதலை மேற்கொண்டது.போர் நிறுத்தத்தை சுற்றியுள்ள சில மணிநேரங்கள் காஸாவுக்கு இது ,காடந்த வாரத்தில் மிகவும் இரத்த களரியான நாள்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு. தம்மை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.