இதுவே வேதமாக்கிடும்..!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
காலையிலே
சண்டை,
மாலையிலே
சமாதானம்…
இதுவே
இல்லற தர்மம்…
இல்லை யெனில்
பெருங் கருமம்…
கடக்காமல்
நின்றால்,
கசந்துப் போகும்
வாழ்வு…
வழக்காடி
கிடந்தால்,
வசந்தம் வருமா..!
கூறு..?
முட்டுவதும்
மோதுவது…
சாலையிலே
விபத்து…
திட்டுவதும்
தீட்டுவதும்…
வாழ்க்கையிலே
இயல்பு…
அன்பை அள்ளி
கொட்டுவதும்…
ஆசை வார்த்தைப்
பேசுவதும்…
கட்டிலிலே மட்டுமா…!
கதவைத் தாண்டி
வந்த பின்னும்…
காதலாக்கி
வாழ்ந்து விட்டால்…
நடப்பு நாளும்
கசக்குமா..!
இருக்கும் போது
கையிலே…
கண்ணில் வைத்து
காத்திடு…
இல்லை என்ற
நிலையிலே…
நினைவு மட்டும்
நெஞ்சிலே…
விதையம்
இன்றி
விளைச்சலா..!
முயற்சி
இன்றி
நடக்குமா..?
ஈன்றவரின்
சிறமத்தை,
இதயத்திலே
அளவிடு…
உனது சிறமம்
பாதி தான்,
உணர்ந்து விடின்
ஜாலி தான்…
படித்தப் படிப்பு
வாழ்க்கையில்,
பாதைப் போட
உதவிடும்…
பட்டறிவு மட்டுமே
வாழ்வை
வேதமாக்கிடும்…
எழுத்து :
வேல் முருகன்
சுப்ரமணியம்…
19 சனவரி 2025
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏