பல பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
அதிக மழையுடனான வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திம்புலாகல, ஈச்சிலம்பற்று, ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமன்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் மகாவலி ஆற்றின் கரையோர தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலத்திற்குள் வெள்ளபெருக்கு ஏற்படவுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.