வானிலையில் மாற்றம்..!

நாட்டின் பல பாகங்களில் அண்மைய நாட்களில் அதிகளவான வெப்பநிலை பதிவாகியிருந்தது.எனினும் இன்று முதல் மாற்றம ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் , அனுராதபுரம் மற்றும் காலி மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும்.

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் 50 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *