90 பாலஸ்தீன மக்கள் விடுதலை..!
இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கிடையில் நேற்று முதல் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய 90 பாலஸ்தீன பிரஜைகள் இஸ்ரேலில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதற்கு பதிலாக 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில் இரு சாராரும் விடுவித்துக்கொண்டனர்.
இதற்கமைய 90 பாலஸ்தீன பிரஜைகளை ஏற்றிக்கொண்டு பஸ் பாலஸ்தீனத்தை வந்தடைந்தது. இதன் காரணமாக பலரும் தமது நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்தனர்.
போர் காரணமாக பாலஸ்தீனத்திலிருந்து இடம் பெயர்ந்த மக்கள் தமது இருப்பிடம் நோக்கி வந்தனர்.மேலும் பாலஸ்தீன கொடியினை ஏந்தி மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.