அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்கவுள்ளோம்- டொனால் ட்ரம்ப்..!
செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கொடியை பறக்க விடுவோம் என டொனால் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.” அமெரிக்க கொடியை செவ்வாய் கிரகத்தில பறக்க விடுவோம்,அமெரிக்க கொடியிலுள்ள நட்சத்திரங்களை செவ்வாய் கிரகத்தில் பதிக்கவுள்ளோம்,செவ்வாய் கிரகத்தில் நட்சத்திரங்களையும் ,2கோடுகளையும் நடுவதற்கு அமெரிக்க விண்வெளி வீரர்களை அனுப்புவோம்.பலம் வாய்ந்த ,சதந்திரம் நிறைந்த மற்றும் நம்பிக்கையான நாட்டை உருவாக்குவதே என்நோக்கம்” என்று தெரிவித்துள்ளார்.
விண்வெளி துறையில் அமெரிக்காவானது பல சாதனைகளை படைத்துவரும் நிலையில் டொனால்ட் ட்ரம்ப்பின் இந்த கருத்தானது.அமெரிக்க மக்களுக்கு வலுவூட்டுவாகவும் மகிழ்ச்சிமிக்கதாகவும் அமைந்திருக்கிறது.