ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி உயிரிழப்பு..!

ஹிஸ்புல்லா இராணுவத்தின் மூத்த தளபதி ஷேக் முஹமது அலி ஹமாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்ந நிலையில்,தனது வீட்டின் முன்பு இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.இவர் மீது 6 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும்,சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன போரில் ஹிஸ்புல்லா இராணுவமானது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *