வண்ணத்து பூச்சியாய் இரு..!

இன்றைய எனது கவிதை

பா புனைந்தேன்!
வண்ணமயமான
வண்ணத்து பூச்சி மேலே!
🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

பல வண்ணத்தில் பறந்து வரும் வண்ணத்துப் பூச்சியே!

பட்டற்ற வாழ்வுதனை
பற்றிட தூண்டிடும்
பட்டாம்பூச்சியே!

என் எண்ணத்தைக் கவர்ந்திடுதே! கண்ணுள்ளே திண்ணியமாய் விழுந்து
பின்னிப் பதிந்து
உள்ளம் கொள்ளை போனதே!

எண்ணத்தில் எது நினைந்து
இவ்வண்ணமதை விண்ணகத்தான்
இவைக்கீந்தான்!

மண்ணகத்தார் பொறாமையில் பொருமிக் கருகும் வண்ணம்!

தன்னங்கத்தில் பல வண்ணமிலா கருப்பு வெள்ளை மாநிற மாந்தர்காள்!

எண்ணத்தில் வெண்மை கொள்வீர்!
விண்ணகத்தார் அகம் கவர வண்ணத்து பூச்சி
போல இலகுவான
மனம் கொள்வோம்!

வண்ணம் மிளிரும் இவ்வண்ணத்துப் பூச்சி போலே
மின்னிடுமே நம் வாழ்வுந்தான் இனிமேலே!
🦋🎀🦋🎀🦋🎀🦋🎀🦋
பா ஆக்கம்
என்றும் அன்புடன்
நா.ஆனந்தி சேது
சீர்மிகு சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *