சூரிய பிரகாசத்தில் இவை…!

நட்சத்திரம்
நமக்கு
தூரமானாதா?

பல
ஒளி
ஒலி
ஆண்டுகள்
பயணிக்க
வேண்டுமா?

என்
கண்களின்
வெளிச்சத்தில்
கவிதை
பாடும்
விண்மினியே!

எனக்கு
ஒன்றும்
அவ்வளவு
பேராசை யில்லை?

இரண்டு
நட்சத்திரங்களின்
இடைப்பட்ட
தூரத்தில்
எனக்கு
ஒர்
கல்விச்சாலை
வேண்டும்.

அதில்
படிக்க
வரும்
யுவதிகளின்
கண்அசைவை
கண்டுவிட்டு
என்
வீட்டில்
வந்து
கண்
அயரவேண்டும்.

தூக்கத்தின்
விழிப்பில்
கற்பனைகளில்
நட்சத்திரங்கள்
தங்கள்
மொழியில்
பேசுவதை
உணரவேண்டும்.

இயற்கை
நம்மை
போன்ற
உயிர்பொருள்.

அதன்
ஆதி
தாளத்தை
அறியாத
நர்த்தனம்
மனித
அறிவியல்.

காரண
காரியம்
உணராத
உணர்த்த
இயலாத
கல்வி
அறிவின்
விஞ்ஞானத்தின்
வளர்கரு
தன்மாற்றத்தில்
கோடி
சூரிய
பிரகாசத்தில்
கேள்விகள்
விடைகள்
சேரும்
இடத்தில்
பிரபஞ்ச
கோள்களின்
திறவுகளில்
கோடி
உயிர் வாழிகள்
மனிதனை
போல்
மனிதனுக்கு
மேல்நிலை
அறிவில்
கண்டறிய
பயணப்பட
வாழ்த்துக்கள்.

அறிவில்
அறிவியலில்
பெரிதாவதை
விட
அன்பில்
பிரபஞ்சம்
பயணப்பட
என்
ஆசிர்வாதங்கள்
வாழ்த்துக்கள்.

நட்சத்திரம்
புராணத்தின்
கவிதையில்
அருந்ததி
துருவன்
இவர்களின்
குடியிருப்பு
வீடுகள்.

வியப்பதற்கு
பாரத
தேசத்தவனுக்கு
என்றும்
ஒன்றுமில்லை.

எல்லாம்
எங்கள்
முன்னோர்களின்
வியாச
திறவுகோல்..

கேலோமி🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *