தூக்கம் மறந்தவள்..!
தாய்மை
உயிர் எழுத்தின்
முதன்மையானவளே!
உயிர்
தந்தவளே!
என்னைப்
பெற்றவளே!
பெயர்
வைத்தவளே!
என்னை வளர்க்க
கல்மண் சுமந்தவளே!
கால்வலி என்றதும்
காலனியில்லாமல் நடைகற்று கொடுத்தவளே!
நான் தூங்க
தன்தூக்கம்
மறந்தவளே!
ஆராரோ பாடி
ஆர்பரித்தவளே!
என்னை உருவாக்க
தன் உடலை உருக்கியவளே..

வாழு வாழ வை
வாழ விடு வாழவழிவகுத்து கொடு..
என்று வாழ்க்கையை
உணர செய்தவளே!
இப்டிக்கு
இசைமழை
அ.முருகேசன்
கிருஷ்ணகிரி