நெஞ்சில் நிறைந்தவை..!
இனம் தேடி பறவை கூடு தேடும் தருணம்
வண்டுகளுக்கு தேனை உணவாக்கிவிட்ட களைப்பில் மலர்கள்
தாயிடம் அன்றைய நாடகத்தை கதை சுருக்கமாக சொல்ல விரைந்த பிள்ளைகள்
தேநீர்க்கடையில் தேநீரோடு ஆசுவாசப்படுத்தும் தொழிலாளர்கள்
மதிய தூக்கத்தை முடித்து விட்டு பேரப்பிள்ளைகள் வரவிற்காக காத்திருக்கும் தாத்தா
பூக்களை கோர்த்து கொண்டே உலக நடப்பை பேசும் அண்டை வீட்டார்
சோறூட்டும் சாக்கில் நிலவை தரிசிக்க காத்திருக்கும் பால் சோறு

மயங்கி விழும் சூரியனை மேக விசிறிகள் மென்மையாய் வருட
வழி மாறாமல் பறந்து கொண்டிருக்கும் நாரை கூட்டம்
திசையென்பதே அறியாத கழுகு பட்டாளம் வட்டமடிக்கும்
குமுதா அழகிரி திருச்சி