சிவப்பு ரோஜா…!
நான் வளர்த்த ரோஜா
தெருமுனையில் செடிவிற்பவரின் வருகை ஆசையை தூண்டியது
நட்டுவைக்க இடமேது
தொட்டியோடு பேரம்பேசு
வெள்ளை ரோஜா பாந்தமாக
சிவப்பு ரோஜா நெஞ்சையள்ள
வீட்டுமுற்றம் இன்னும் அழகாக
நறுமணம் வருமென காத்திருக்க
புதுவரவை தோழிகளுக்கு உரைக்க
புடைசூழ தோழிகள் ஆராய்ந்து பார்க்க

எனக்கும் ரோஜா வேண்டுமென முன்பதிவு நடக்க
முதல் ரோஜா சாமிக்கு என்றதும் முகம்கறுக்க
வேட்கையின் வேகமறியாமல் மெல்ல வளர
தினமும் ரோஜாவிற்கு எதிர்பார்ப்புகள் நிறைய
சிறு மொட்டு தலையெடுக்க
என் கால்கள் ஆகாயம் அளக்க
குமுதா அழகிரி திருச்சி