உயிரோட்டமான காதல்..!
காதலும் நானும்
π=π=π=π=π=π=π=π=π
தாய் தந்தை மீது
நான் கொண்ட காதல்
ஆழமாளது … என்
ஆவி உள்ளவரை
அழியாதது…
உடன் பிறப்புகளிடம்
நான் வைத்த காதல்
உண்மையானது
உயிரில் கலந்தது…
கல்வியில் கொண்ட காதல்
காலத்தால் அழியாதது
எவராலும் அழிக்க
முடியாதது…
தோழிகள் மீது என்
காதலானது பிரிந்து
ஆண்டுகள் பல கடந்தும்
உள்ளத்தின் தேடலானது…
இளமைப் பருவத்தில்
தவிர்க்க முடியாமல் வரும்
முதல் காதல் … சொல்லாத
ஒருதலைக் காதலானது…
என்னைத் தேடிவந்த
காத(லன்)ல் கை கூடி
மணமக்களாய் இணைத்து
மங்களகானம் இசைத்தது…
காதல் என என் பின்னால்
சுற்றித்திரிந்த காளைகள்
ச்ச மிஸ் ஆச்சே … அவள் வேறொருவன்
மிஸ்ஸஸ் ஆனாளே…
என்று அவர்கள் எஸ்ஸாகினர்
பின் குடும்பம் பிள்ளைகள்
மீது கொண்டேன் என்றும்
மாறாத தூய காதல்..
ஆனாலும் உள்ளம் துடிக்கிறது
வேதனையில் வெடிக்கிறது
உயிரோட்டமான என் காதலோடு
ஒப்பிட்டுப் பார்த்தால்…
எவருக்கும் என்னிடமில்லை
உண்மையான காதல் என்று
இறைவன் உணர்த்தினான்
என் மீது கருணை கொண்டு
படைத்தவன் தன்
படைப்பினங்கள் மீது
கொண்ட அன்பை விட
வேறெந்த காதலும்
உயர்ந்ததல்ல என்று …
![](https://vetrinadai.com/wp-content/uploads/2025/02/20250209_2031573502442658302694849.jpg)
தெளிவாக உணர்ந்தேன்..
இன்று தவமிருக்கிறேன்
இறைவனின்
அழைப்புக்காக
போலியான உலகை
வெறுத்து…
மறுமை வாழ்வின் மீது
பற்றும் காதலும் கொண்டு
சரீனா உவைஸ்✍️