இன்ப அதிர்ச்சி..!
திருமண நாள்
இரு மனங்கள் இணைந்து
இரு கரங்கள் கோர்த்து
இதயத்துள் மெளன ராகங்களை
இன்பமாக மீட்டிய தருணம்
இன்றும் மாறாமல் மலரும்
இனிய நினைவுகளாய்….
இவ்வையகத்தில் வாழும் வரை
இந்நாள் மறந்திடுமோ…
இணை சேர்ந்து
இணைந்து வாழ்ந்து
இருபத்தெட்டு ஆண்டுகள்
இன்ப துன்பங்களை
இணைந்தே கடந்தோம்…
இபத்தைந்தாம் ஆண்டு நிறைவில்
இன்புற்றேன்…
இவ்வளவு காலம்
இலகுவாக கழிந்ததை எண்ணி…
இதற்கு தானா
இன்பத்தில் திளைத்தேன் என
இவள் உள்ளம் நினைக்கும் அளவுக்கு
இன்ப அதிர்ச்சி தந்தாய்
இணை பிரிய நீ முடிவெடுத்து…

இன்ப துன்பங்கள்
இடர்கள் இன்னல்கள்
இவை வரும் போகும்
இப்படி முடிவெடுத்தால்
இவள் விதி என்ன செய்யும்….
இணைந்து வெள்ளி விழா
இன்பமாக கொண்டாடினோம்..
இவ்வையகத்தில்
இது புதுமையல்ல
இணையாக வந்தவளை
இதயம் முழுமையாக புரிந்து
இணை பிரியாமல் அவளை
இறுக்கமாக பற்றிக்கொண்டு…
இணைந்து வாழ்வதே
இன்ப வாழ்வு… உன்னால்
இழந்த மகிழ்ச்சியை
இழந்த நிம்மதியை…
இனி மீளப்பெற முடியாதே
இவள் தந்தி அருந்த வீணையாய்
இசை மீட்டுகிறாள்
இதயத்துள் சோக கானம்…
சரீனா உவைஸ் ✍️