இனிய தொரு புன்னகை..!

திருமண நாள் மலரும் நினைவுகள் !

அன்று பார்த்து புன்னகைத்த நீ

இன்றும் அதே புன்னகையில்!

உன்னைப் பெற

நான் தவம் செய்யாமலே
நீ எனக்கு கிடைத்த வரம் !

உன் அன்பான அரவணைப்பில்

என் தாயாய்
நீ மடி மீது தாலாட்டுகிறாய்

உன் அன்பைக் காட்டி!

இனியதொரு புன்னகைப் பூவாய்

மங்களகரமான
அந்நாள்
என் வாழ்வில் எழுச்சி நாள் !

சுபமுகூர்த்த நாள் !இன்றும்
என் வாழ்வில்
சுகமான சுகமாய்

இனிய நினைவாய்
நெஞ்சில் இனிக்கிறது!

இரம்ஜான் எபியா சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *