Season Ticket இல் பயணிப்போரை CTB இல் ஏற்றிச் செல்வது கட்டாயம்

Season Ticket இல் பயணிப்போரை CTB இல் ஏற்றிச் செல்வது கட்டாயம்

  • ஏற்ற மறுத்தால் 1958 SLTB எண்ணிற்கு அழைக்கவும்

பருவ சீட்டை (Season ticket) வைத்திருக்கின்ற பாடசாலை மாணவர்கள், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முதியவர்களை இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கியுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாரேனும் ஊழியர் ஒருவர் இந்த பருவ சீட்டை வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுத்தால், அது இலங்கைப் போக்குவரத்து சபை கொள்கையின்படி கடுமையான குற்றமாகும் என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பருவ சீட்டை வைத்திருப்பவர்கள் அனைவரையும் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல மறுக்கும் பஸ் ஊழியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொள்ளும் பருவ சீட்டை வைத்திருப்பவர்கள், 1958 என்ற எண்ணை அழைத்து SLTB தகவல் மையத்திற்கு தெரிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *