ரயில் பயணம்..!
நான் சென்ற முதல் இரயில் பயணம்
நான்
என் சித்தி
வீட்டுக்கு சென்ற
இரயில் பயணம் அழகான கனவாய் !
குட்டித் தேவதையாய் குட்டைப் பாவாடையுடன் இரட்டைச் சடை
முன்னே தொங்க
என் அக்காவின் கைப்பிடித்து ஏற
நீண்ட இரயில் வண்டி கோச்
சிக்கு
புக்கு
சிக்கு
புக்கு
கோச் சிக்கு புக்கு
என்ற தாலாட்டில்
தடதடதட
தட தட தட
தட என்ற
தண்டவாளக் குலுக்கலில் பயந்து அம்மாவின் தோளில் நான் சாய
மரங்கள் வேகமாக முன்னும் பின்னும் ஒட
நான் கை அசைக்க மரங்கள் ஓட ஓட அதிசயமாய் பார்த்தபடி
நான் கம்பி பிடித்து
நிற்க நின்றது
இரயில் வண்டி

பிறகு
12 ஆம் வகுப்பு
படிக்கும் போது பொதுத்தேர்வு கொரடாச்சேரிக்கு
செல்ல
இரண்டாம் முறையாக ஆறு நாள்
பயணத்தில்
கையில் புத்தகத்துடன்
எதனையும் இரசிக்காமல்
படித்துக் கொண்டே தோழிகளுடன் நான் !
இரம்ஜான் எபியா சென்னை