உலக தமிழர் மாநாட்டில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு பெருமை சேர்த்த தேசபந்து செல்வராசா!!

வியட்னாம் உலக தமிழர் மாநாட்டில் உலகின் முதல் தமிழ் பேராசிரியர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் புகழை உரைத்து சுவாமிகளின் பெருமையை மேலும் உலகறியச் செய்த பெருமையை மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவரும் தொழிலதிபருமாகிய தேசபந்து மா.செல்வராசா நிலை நாட்டியுள்ளார்.
வியட்னாமில் உலக தமிழர் மாநாடு இடம் பெற்று வரும் நிலையில் நேற்றையதினம் (22) திகதி இடம்பெற்ற மாநாட்டில் “ஈழத்தின் அடையாளம் விபுலானந்தர்” என்ற தலைப்பில் அற்புதமான ஒரு சிறப்பான உரையை மா.செல்வராசா வழங்கியுள்ளார்.
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க தலைவரும், மட்டக்களப்பு தமிழ் சங்க ஆலோசகரும், ஈஸ்ட் லகூன் விடுதியின் உரிமையாளரும், சமூக சேவகருமான தேசபந்து மா.செல்வராஜா அவர்கள் குறித்த சிறப்பு உரையினை 58 நாடுகளில் இருந்து வந்த தமிழ் கல்விமான்கள் மற்றும் வர்த்தகர்கள் முன்னிலையில் கிழக்கு மண்ணின் பெருமை சுவாமி விபுலானந்த அடிகளாரே என பேசி தாய்நாட்டையும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரின் குறித்த செயலை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதுடன், இம்மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சித்தர்கள் குரல் அமைப்பின் ஆஸ்தான குரு சிவசங்கர் ஜீ உள்ளிட்ட வர்த்தகப்பிரதிநிதிகள் பலரும் திருமதி.சு.செல்வராசா அவர்களும் கலந்து கொண்டு மாவட்டத்திற்கும் மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.