மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி
யாழில் வெளிநாட்டிலிருந்து வந்த மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி மூவர் காயம்.
யாழ்.வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் கடந்த (19-02-2025) அன்று மாலை நால்வர் மீது வவுனியாவில் இருந்து வந்தவர்களால் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.
குடும்பதகராறின் காரணமாக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் தனது தந்தை மீதும், சகோதரன் மீதும், சகோதரனின் மகன் மீதும்,சகோதரனின் மனைவி மீதும் வவுனியா பகுதியில் இருந்து (NP CAH – 0636) என்ற இலக்கமுடைய வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்குள் புகுந்து கம்பி,கற்களால் தாக்குதல் நடத்தியிருந்தார்.

அடி காயங்களுக்குள்ளான நால்வரும் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பலத்த காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நபர் நேற்று (23-02-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.