வள்ளலார் அறநெறிப்பாடசாலை அங்குரார்ப்பணம்

வாழைச்சேனை – கிண்ணையடி பெருநிலப்பரப்பில் நாகதம்பிரான் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் கிண்ணையடி தெற்கு வள்ளலார் அறநெறிப்பாடசாலை எனும் பெயர் நாமத்துடன் 23.02.2025 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு அறநெறிப்பாடசாலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
கிண்ணையடி மாணிக்கப்பிள்ளையார் ஆலய தலைவரும், நாகதம்பிரான் ஆலய ஆலோசகரும், முன்னாள் அதிபருமான .அருளேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக நாகதம்பிரான் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.தாமோதரம் ஐயா, சிறப்பு அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் நே.பிருந்தாபன், ஆன்மீக பிரசாரகரும், பேத்தாழை – வாழைச்சேனை வீரையடி விநாயகர் அறநெறி பாடசாலை அதிபருமான ச.கார்த்தீபன், திறன்விருத்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.வி.காண்டீபன், கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலய ஆசிரியர் கலைப்பிரியன், நாகதம்பிரான் ஆலய தலைவர். ஜீவபிரதீப், செயலாளர் ஜெ.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் அறநெறிப்பாடசாலையை சிறப்பாக நடாத்துவதற்கு இங்குள்ள படித்த இளைஞர், யுவதிகள் தாமாகவே முன்வந்து அறநெறிக்கல்வி மூலம் சிறந்ததொரு எதிர்கால சமூகத்தை வளர்த்தெடுக்கும் நன்நோக்குடன் அறநெறிக்கல்வியை மாணவர்களுக்கு வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



