மௌனம் பேசியது..!
தலைப்பு: மௌனம்
“””””””””””””””””””””””””””””””
பிறந்தநாள் தெரிந்த
உந்தன் இறந்தநாள்…….?
உமக்கு மட்டுமல்ல
எமக்கும் புரியவில்லை….?
நாடே உனக்காக இருந்து என்ன பயன்…..?
நாடகம் பார்த்ததே கண்டபலன்….
ஊடகம் உலகம்
செய்த கலகம்……
ஊழ்வினைப் பயனோ
உடனிருந்தோர் வினையோ…
உடல் சேர்ந்தது காடு
உயிர் இழந்தது நாடு……
நன்றி மறவா பன்றிகள்
ஒன்றிக்கொன்றன உன்னை
கன்றிப் போன உடலோடு
ஒன்றிப்போனாய் மண்ணோடு………

தொலைந்தது நீயல்ல தொலைத்தது நாங்கள்
மக்களுக்காக நான் மக்களாகவே நான்……
உங்கள் மௌனம் இன்னும் எங்களுக்கு ஒரு மௌனமாக இருக்கிறோம்
மக்காக மக்கள்………..
முனைவர் :
தமிழ் ஆர்வலர்
கவித்தேடல்
மு.மொய்தீன்
(வடசென்னை)
24-2-2025-