துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயம்..!
இன்று காலை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது மினுவாங்கொடை பகுதியில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் போது 36 வயதுடைய நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் ,குறித்த நபர்கள் தப்பித்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.