பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம்..!
நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 2.36 மணியளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 5.5 பதிவாகியிருந்ததாக தேசிய நில அதிர்வு நிலையம் தெரிவித்துள்ளது.இது 10 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை பாகிஸ்தானிலும் இன்று அதிகாலை 5.14 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.இது ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானதுடன். 10 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.