ஷிகோவில் நிலநடுக்கம் பதிவு…!

ஜப்பானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானில் அமைந்துள்ள ஷிகோவில் இன்றைய தினம் காலை 6.24 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது ரிச்டர் அளவில் 5.1ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஷிகோவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் போது கட்டிடங்கள் இலேசாக அதிர்ந்த போதும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *